The dreaded Sethuism!

Thursday, January 24, 2008

சுவை

சுவை

கடந்த வார இறுதியிலும், இந்த வார தொடக்கத்திலும் நான் சற்று உடல் நலம் குன்றி இருந்தேன். அப்பொழுது ரசம் வைத்து சாப்பிட்டால் உடல் நலத்திற்கு நல்லது என கருதி ஞாயிற்றுக்கிழமை அன்று நாங்கள் (நண்பர்கள்) ரசம் வைத்து சாப்பிட்டோம். அடுத்த நாள், எனக்கு உதவியாக இருக்கும் என்று எனது நண்பர் (திருமணம் ஆனவர்), அவர் வீட்டிலிருந்து எங்களுக்கு ரசம் வைத்து எடுத்து வந்தார். அவர் எடுத்து வந்த ரசம், நாங்கள் செய்ததை விட மிக நன்றாக இருந்தது.


சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது நான் சொன்னேன் -“நாம வைச்சத விட இது எவ்வளோ வித்யாசமா இருக்கு பாருங்க…”

அதற்கு ஒரு நண்பர் சொன்னார் “நிறைய என்ன வித்தியாசம்? ஒரே வித்தியாசம் தான்…” என்று சொல்லி நிறுத்தினார்…


நாங்கள் அனைவரும் அது என்ன என்று ஆருவமாக அவரை பார்த்தோம், அப்பொழுது அவர் சிறிய புன்முறுவலுடன் சொன்னார் -“சுவை தான் அது. அவங்க பண்ணியது சுவையா இருக்கு, நாம பண்ணியது அப்படி இல்லை. அது தான் வித்தியாசம் என்றார்…”.


மக்கள் என்னை முறைத்தனர்; எனது பாதிப்பினால் தான் நண்பர் இப்படி கூறினார் என்று நினைத்து … ;-)

Labels: , , , ,

3 Comments:

At January 27, 2008 at 1:02 PM , Blogger சேதுக்கரசி said...

இதுவும் நல்லாருந்தது.

தமிழ்ப் பதிவுலகத்துக்குப் புதுசா நீங்க? வேற யாரோ பதிவில் உங்க பின்னூட்டத்தைப் பார்த்துட்டு யாரிது நம்ம பேர்லன்னு தான் பார்க்கவந்தேன்.

தேன்கூடு, தமிழ்மணத்தில் உங்க வலைப்பூவை சேர்க்கலாமே? அப்படி சேர்த்தீங்கன்னா word verification-ஐத் தூக்கிடுங்க, அப்பதான் பின்னூட்டம் போடவர்றவங்க அதைப் பார்த்துட்டு சோம்பல்பட்டு ஓடிடமாட்டாங்க :-)

 
At January 27, 2008 at 3:35 PM , Blogger சேது said...

சேதுக்கரசி நன்றி. ஆமாம் நான் பதிவுலகத்துக்கு புதியவன். இப்பொழுது தமிழ்மணத்தில் இணைந்துவிட்டேன். தேன்கூடு பற்றி இப்பொழுது தான் எனக்கு தெரியும். அதிலும் இணைய ஆவன செய்கிறேன். தங்களின் கருத்துக்கு நன்றி.

 
At January 28, 2008 at 1:48 AM , Blogger nrajesh said...

Thnx for letting know about "Thenkoodu" :)

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home