The dreaded Sethuism!

Tuesday, January 29, 2008

மளிகைக் கடையில் ஒளிமயமான வினாடிகள் (lighter moments)

மளிகைக் கடையில் ஒளிமயமான வினாடிகள் (lighter moments)


இந்த பதிவில், கடைகளில் நான் எதிர்கொண்ட சில காமடி பற்றி எழுதியுள்ளேன்:

ஒன்று:

சில வருடங்களுக்கு முன், நான் சென்னை வந்த புதிதில் நடந்த சம்பவம் இது. மளிகைக் கடைக்கு அரிசி வாங்க சென்றேன். அந்த கடையில் உள்ள அரிசி வகையில், 12.50 ரூபாய் அரிசி தான் எங்கள் வீட்டில் வாங்குவோம். அந்த கடையில்:

நான்: அண்ணே, அந்த 12.50 ரூபாய் அரிசில ஒரு கிலோ கொடுங்க...

கடையில் வேலைச் செய்பவர்: 12.50 ல ஒரு கிலோ போட்டாச்சு...

நான்: எவ்வளோ ஆச்சு? (ஏதோ ஞாபகத்தில் கேட்டுவிட்டேன், கேட்ட பின்பு தான் உணர்ந்தேன், இப்படி மடத்தனமாக கேட்டு விட்டோமே என்று)

கடையில் வேலைச் செய்பவர்: (சற்று யோசித்து விட்டு) 12.50 அரிசி ஒரு கிலோ...ம்ம்ம்.... 12.50 ரூபாய் சார்....

ஹீம்ம்ம்.... எல்லோருமே அன்று நல்ல தெளிவு தான் போல....


இரண்டு:

நான் உதகை சுற்றுலா சென்ற போது நடந்த சம்பவம். நண்பர்கள் சிலர் ஐஸ்க்கிரீம் சாப்பிடலாம் என்று ஒரு கடைக்கு சென்றோம். அங்கு விலைப் பட்டியலில் ஒரே வகை ஐஸ்க்கிரீம்-இல் ரூ.14, ரூ.12 என இருந்தது.

நான்: அண்ணே, 14 க்கும் 12க்கும் என்ன வித்யாசம்-ணே?

கடைக்காரர்: ரெண்டும் ஒன்னுதான்...

நான்: (அவர் முடிப்பதற்க்குள்) என்னண்ணே, 14 க்கும் 12க்கும் 2 ரூபாய் வித்யாசம் இருக்கே... ரெண்டும் ஒன்னுதான்னு சொல்றீங்கலே...?

கடைக்காரர்: அவசரப்படரீங்களே... 14க்கும் 12க்கும் 2 வித்தியாசம்ன்னு எனக்கு தெறியாதா? 14 ரூபாய் ஐஸ்க்கிரீம் கோன் - ல வரும், 12 ரூபாய் ஐஸ்க்கிரீம் ப்ளாஸ்டிக் கப் - ல வரும், அதான் வித்தியாசம்.

நான்: ஓ ஹோ ... சரி 12 ரூபாய் ஐஸ்க்கிரீம் கொடுங்க... ஐஸ்க்கிரீம் அதுவே வருமா...?

கடைக்காரர்: அதுவே வராது, நான் தான் எடுத்துக் கொடுக்கணும். உங்ககிட்ட வார்த்தைய கரெக்ட்டா போட்டு பேசனும் போல இருக்கே... இந்தாங்க ஐஸ்க்கிரீம் . இப்போல்லாம் அங்க இங்க ப்ளாஸ்டிக் குப்பை போட்டா நெறைய ஃபயின் போடறாங்க. ஜாக்கிரதை...

நான்: ஓ.. அப்படியா? நான் சாப்பிட்டு இந்தக் குப்பைத் தொட்டிலயே போட்டுட்டு போய்டறேன்... ப்ளாஸ்டிக்க குப்பைத் தொட்டில போடறத்துக்கெல்லாம் ஃபயின் போட மாட்டாங்கல்ல...?

கடைக்காரர்: தம்பி கோயம்பத்தூர்-ங்களா? ரொம்ப கிண்டலா பேசரீங்களே...

நான்: இல்லைங்ண்ணா நான் திருச்சி, கோயம்பத்தூர் வழியா தான் வந்தேன், அதனால இருக்குமோ..? :)

Labels: , , ,

Thursday, January 24, 2008

நான் தான் கழட்டி வெச்சேன்!

நான் தான் கழட்டி வெச்சேன்!

இங்கே அனைத்து வீடுகளிலும் பாத்திரம் கழுவும் இடத்தில் உள்ள ‘சின்க்’ இன் கீழே, அங்கு சேரும் உணவு மற்றும் குப்பைகளை அரைத்து விட ஒரு சிறு இயந்திரம் இருக்கும். உணவு (அ) குப்பை சேர்ந்து அடைத்துக்கொண்டு தண்ணீர் போகாத தருணத்தில் அந்த இயந்திரத்தின் பொத்தானை இயக்கினால் அந்த இடம் சுத்தமாகி தண்ணீர் நன்றாக செல்லும்.

ஒரு நாள் அந்த இயந்திரத்தை இயக்கினால் 'கட முடா' என்று ஒரு வித சப்தம் வர ஆரம்பித்தது. அதை பற்றி எங்கள் அபார்ட்மென்ட் அலுவலகத்தில் கூறினோம். ஒரு மெக்கானிக்கை அனுப்பினார்கள். அவர் வந்து சரி செய்த பொழுது, அந்த இயந்திரத்திற்கு சம்பந்தமே இல்லாத ஒரு ‘nut’ ஒன்று அங்கு கிடைத்தது. “அது தான் அந்த சத்தத்திற்கு காரணம்; இது எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை” என்று கூறி மெக்கானிக் சென்று விட்டார்.

அன்று இரவு உணவு உண்ட பிறகு பாத்திரம் கழுவும் பொழுது எனக்கு அது பற்றி ஞாபகம் வந்தது. நண்பர்கள் அனைவரும் சாப்பிட்டு கொண்டே TV-இல் ஏதொ படம் பார்த்துக்கொண்டிருந்தனர். நான் நன்பர்களிடம் கேட்டேன் – “இங்க பாருங்க ஒரு 'nut'…. இது அந்த குப்பைக்குள்ள இருந்து மெக்கானிக் எடுத்தாரு. இது தான் இந்த machine-ல் வந்துகிட்டு இருந்த சத்தத்திற்கு காரணமாம். இது எங்க இருந்து வந்ததுனு தெரியலை. இந்த nut பத்தி யாருக்காவது தெரியுமா?”. நண்பர் ஒருவரை தவிற மற்ற அனைவரும் நான் கேட்டதற்கு தெரியலையே என்பது பொல தலையசைத்து பதில் அளித்தனர். நண்பர் ஒருவர் மட்டும் நான் கேட்ட கேள்வியில் கவனம் செலுத்தாமல் பார்த்துக்கொண்டிருந்த அந்த படத்தில் மூழ்கி இருந்தார். நான் கிண்டலாக சொன்னேன், " நன்பரோடது தான், அவர் தலைல இருந்து மறை கழண்டு நேற்று தவறி விழுந்திடுச்சு பொல" என்று….

அப்பொழுது திடீரென்று ஏதோ ஞாபகம் வந்ததை போல அப்பாவியாக சொன்னார் – “ நான் தான் அதை கழட்டி வெச்சேன்” என்று... :)

Labels: , , ,

சுவை

சுவை

கடந்த வார இறுதியிலும், இந்த வார தொடக்கத்திலும் நான் சற்று உடல் நலம் குன்றி இருந்தேன். அப்பொழுது ரசம் வைத்து சாப்பிட்டால் உடல் நலத்திற்கு நல்லது என கருதி ஞாயிற்றுக்கிழமை அன்று நாங்கள் (நண்பர்கள்) ரசம் வைத்து சாப்பிட்டோம். அடுத்த நாள், எனக்கு உதவியாக இருக்கும் என்று எனது நண்பர் (திருமணம் ஆனவர்), அவர் வீட்டிலிருந்து எங்களுக்கு ரசம் வைத்து எடுத்து வந்தார். அவர் எடுத்து வந்த ரசம், நாங்கள் செய்ததை விட மிக நன்றாக இருந்தது.


சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது நான் சொன்னேன் -“நாம வைச்சத விட இது எவ்வளோ வித்யாசமா இருக்கு பாருங்க…”

அதற்கு ஒரு நண்பர் சொன்னார் “நிறைய என்ன வித்தியாசம்? ஒரே வித்தியாசம் தான்…” என்று சொல்லி நிறுத்தினார்…


நாங்கள் அனைவரும் அது என்ன என்று ஆருவமாக அவரை பார்த்தோம், அப்பொழுது அவர் சிறிய புன்முறுவலுடன் சொன்னார் -“சுவை தான் அது. அவங்க பண்ணியது சுவையா இருக்கு, நாம பண்ணியது அப்படி இல்லை. அது தான் வித்தியாசம் என்றார்…”.


மக்கள் என்னை முறைத்தனர்; எனது பாதிப்பினால் தான் நண்பர் இப்படி கூறினார் என்று நினைத்து … ;-)

Labels: , , , ,

Friday, January 11, 2008

சாப்பாடு காலியா?

சாப்பாடு காலியா?

முதலாமவன்: ஏன்டா அந்த Hindi பையன் சாப்பிட்டயான்றத 'khana khaliya' அப்படினு கேட்க்கறான்?

இரண்டாமவன்: டேய்ய் என்னை கேள் சொல்றேன்... HINDI-ல 'khana'-னா சாப்பாடுன்னு அர்த்தம். ஆமாம்... நீ சாப்பிட உட்க்காந்தினா, முடிக்காம எழுந்திருப்பயா... சாப்பாட்டை முடிக்காம எழுந்திருப்பயா... ? அதான் சாப்பாட காலி பண்ணிட்டியானு அவன் correct-அ கேட்க்கறான்...

முதலாமவன்: correct-அ தான் கேட்க்கறான்... இன்னைக்கும் கொஞ்சம் கூட வைக்காம காலி பண்ணிட்டனே... :)

Labels: , , , , , ,