சுவை
சுவை
கடந்த வார இறுதியிலும், இந்த வார தொடக்கத்திலும் நான் சற்று உடல் நலம் குன்றி இருந்தேன். அப்பொழுது ரசம் வைத்து சாப்பிட்டால் உடல் நலத்திற்கு நல்லது என கருதி ஞாயிற்றுக்கிழமை அன்று நாங்கள் (நண்பர்கள்) ரசம் வைத்து சாப்பிட்டோம். அடுத்த நாள், எனக்கு உதவியாக இருக்கும் என்று எனது நண்பர் (திருமணம் ஆனவர்), அவர் வீட்டிலிருந்து எங்களுக்கு ரசம் வைத்து எடுத்து வந்தார். அவர் எடுத்து வந்த ரசம், நாங்கள் செய்ததை விட மிக நன்றாக இருந்தது.
சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது நான் சொன்னேன் -“நாம வைச்சத விட இது எவ்வளோ வித்யாசமா இருக்கு பாருங்க…”
அதற்கு ஒரு நண்பர் சொன்னார் “நிறைய என்ன வித்தியாசம்? ஒரே வித்தியாசம் தான்…” என்று சொல்லி நிறுத்தினார்…
நாங்கள் அனைவரும் அது என்ன என்று ஆருவமாக அவரை பார்த்தோம், அப்பொழுது அவர் சிறிய புன்முறுவலுடன் சொன்னார் -“சுவை தான் அது. அவங்க பண்ணியது சுவையா இருக்கு, நாம பண்ணியது அப்படி இல்லை. அது தான் வித்தியாசம் என்றார்…”.
மக்கள் என்னை முறைத்தனர்; எனது பாதிப்பினால் தான் நண்பர் இப்படி கூறினார் என்று நினைத்து … ;-)

