The dreaded Sethuism!

Thursday, January 24, 2008

நான் தான் கழட்டி வெச்சேன்!

நான் தான் கழட்டி வெச்சேன்!

இங்கே அனைத்து வீடுகளிலும் பாத்திரம் கழுவும் இடத்தில் உள்ள ‘சின்க்’ இன் கீழே, அங்கு சேரும் உணவு மற்றும் குப்பைகளை அரைத்து விட ஒரு சிறு இயந்திரம் இருக்கும். உணவு (அ) குப்பை சேர்ந்து அடைத்துக்கொண்டு தண்ணீர் போகாத தருணத்தில் அந்த இயந்திரத்தின் பொத்தானை இயக்கினால் அந்த இடம் சுத்தமாகி தண்ணீர் நன்றாக செல்லும்.

ஒரு நாள் அந்த இயந்திரத்தை இயக்கினால் 'கட முடா' என்று ஒரு வித சப்தம் வர ஆரம்பித்தது. அதை பற்றி எங்கள் அபார்ட்மென்ட் அலுவலகத்தில் கூறினோம். ஒரு மெக்கானிக்கை அனுப்பினார்கள். அவர் வந்து சரி செய்த பொழுது, அந்த இயந்திரத்திற்கு சம்பந்தமே இல்லாத ஒரு ‘nut’ ஒன்று அங்கு கிடைத்தது. “அது தான் அந்த சத்தத்திற்கு காரணம்; இது எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை” என்று கூறி மெக்கானிக் சென்று விட்டார்.

அன்று இரவு உணவு உண்ட பிறகு பாத்திரம் கழுவும் பொழுது எனக்கு அது பற்றி ஞாபகம் வந்தது. நண்பர்கள் அனைவரும் சாப்பிட்டு கொண்டே TV-இல் ஏதொ படம் பார்த்துக்கொண்டிருந்தனர். நான் நன்பர்களிடம் கேட்டேன் – “இங்க பாருங்க ஒரு 'nut'…. இது அந்த குப்பைக்குள்ள இருந்து மெக்கானிக் எடுத்தாரு. இது தான் இந்த machine-ல் வந்துகிட்டு இருந்த சத்தத்திற்கு காரணமாம். இது எங்க இருந்து வந்ததுனு தெரியலை. இந்த nut பத்தி யாருக்காவது தெரியுமா?”. நண்பர் ஒருவரை தவிற மற்ற அனைவரும் நான் கேட்டதற்கு தெரியலையே என்பது பொல தலையசைத்து பதில் அளித்தனர். நண்பர் ஒருவர் மட்டும் நான் கேட்ட கேள்வியில் கவனம் செலுத்தாமல் பார்த்துக்கொண்டிருந்த அந்த படத்தில் மூழ்கி இருந்தார். நான் கிண்டலாக சொன்னேன், " நன்பரோடது தான், அவர் தலைல இருந்து மறை கழண்டு நேற்று தவறி விழுந்திடுச்சு பொல" என்று….

அப்பொழுது திடீரென்று ஏதோ ஞாபகம் வந்ததை போல அப்பாவியாக சொன்னார் – “ நான் தான் அதை கழட்டி வெச்சேன்” என்று... :)

Labels: , , ,

6 Comments:

At January 27, 2008 at 1:00 PM , Blogger சேதுக்கரசி said...

ரசித்து சிரித்தேன் :-)

 
At January 27, 2008 at 3:25 PM , Blogger சேது said...

படித்து ரசித்தமைக்கு நன்றி :)

 
At February 2, 2008 at 2:27 AM , Blogger தினேஷ் said...

அடுத்தவர்களை சிரிக்க வைத்து மகிழ்ச்சியை ஏற்ப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் உங்களுக்கு என் நன்றிகள்…

தொடரட்டும் சிரிப்பு ஒலிகள்…

தினேஷ்

 
At February 2, 2008 at 11:09 AM , Blogger சேது said...

நன்றி தினேஷ்.

 
At February 2, 2008 at 4:24 PM , Blogger துளசி கோபால் said...

:-))))

சின்னச்சின்ன எழுத்துப்பிழைகள் இருக்கு.
அதையும் கொஞ்சம் பாருங்க.

அறைத்து = அரைத்து

அழுவலகம்= அலுவலகம்

அப்புறம், ரொம்ப நல்லா இருக்கு உங்க சிரிப்பூக்கள்.

 
At February 3, 2008 at 11:48 AM , Blogger சேது said...

மிக்க நன்றி, துளசி கோபால். பிழைகளை சரி செய்துவிட்டேன். மீண்டும் பிழை வராமல் இருக்க முயற்சிக்கிறேன். நன்றி.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home