மளிகைக் கடையில் ஒளிமயமான வினாடிகள் (lighter moments)
மளிகைக் கடையில் ஒளிமயமான வினாடிகள் (lighter moments)
இந்த பதிவில், கடைகளில் நான் எதிர்கொண்ட சில காமடி பற்றி எழுதியுள்ளேன்:
ஒன்று:
சில வருடங்களுக்கு முன், நான் சென்னை வந்த புதிதில் நடந்த சம்பவம் இது. மளிகைக் கடைக்கு அரிசி வாங்க சென்றேன். அந்த கடையில் உள்ள அரிசி வகையில், 12.50 ரூபாய் அரிசி தான் எங்கள் வீட்டில் வாங்குவோம். அந்த கடையில்:
நான்: அண்ணே, அந்த 12.50 ரூபாய் அரிசில ஒரு கிலோ கொடுங்க...
கடையில் வேலைச் செய்பவர்: 12.50 ல ஒரு கிலோ போட்டாச்சு...
நான்: எவ்வளோ ஆச்சு? (ஏதோ ஞாபகத்தில் கேட்டுவிட்டேன், கேட்ட பின்பு தான் உணர்ந்தேன், இப்படி மடத்தனமாக கேட்டு விட்டோமே என்று)
கடையில் வேலைச் செய்பவர்: (சற்று யோசித்து விட்டு) 12.50 அரிசி ஒரு கிலோ...ம்ம்ம்.... 12.50 ரூபாய் சார்....
ஹீம்ம்ம்.... எல்லோருமே அன்று நல்ல தெளிவு தான் போல....
இரண்டு:
நான்: அண்ணே, 14 க்கும் 12க்கும் என்ன வித்யாசம்-ணே?
கடைக்காரர்: ரெண்டும் ஒன்னுதான்...
நான்: (அவர் முடிப்பதற்க்குள்) என்னண்ணே, 14 க்கும் 12க்கும் 2 ரூபாய் வித்யாசம் இருக்கே... ரெண்டும் ஒன்னுதான்னு சொல்றீங்கலே...?
கடைக்காரர்: அவசரப்படரீங்களே... 14க்கும் 12க்கும் 2 வித்தியாசம்ன்னு எனக்கு தெறியாதா? 14 ரூபாய் ஐஸ்க்கிரீம் கோன் - ல வரும், 12 ரூபாய் ஐஸ்க்கிரீம் ப்ளாஸ்டிக் கப் - ல வரும், அதான் வித்தியாசம்.
நான்: ஓ ஹோ ... சரி 12 ரூபாய் ஐஸ்க்கிரீம் கொடுங்க... ஐஸ்க்கிரீம் அதுவே வருமா...?
கடைக்காரர்: அதுவே வராது, நான் தான் எடுத்துக் கொடுக்கணும். உங்ககிட்ட வார்த்தைய கரெக்ட்டா போட்டு பேசனும் போல இருக்கே... இந்தாங்க ஐஸ்க்கிரீம் . இப்போல்லாம் அங்க இங்க ப்ளாஸ்டிக் குப்பை போட்டா நெறைய ஃபயின் போடறாங்க. ஜாக்கிரதை...
நான்: ஓ.. அப்படியா? நான் சாப்பிட்டு இந்தக் குப்பைத் தொட்டிலயே போட்டுட்டு போய்டறேன்... ப்ளாஸ்டிக்க குப்பைத் தொட்டில போடறத்துக்கெல்லாம் ஃபயின் போட மாட்டாங்கல்ல...?
கடைக்காரர்: தம்பி கோயம்பத்தூர்-ங்களா? ரொம்ப கிண்டலா பேசரீங்களே...
நான்: இல்லைங்ண்ணா நான் திருச்சி, கோயம்பத்தூர் வழியா தான் வந்தேன், அதனால இருக்குமோ..? :)
6 Comments:
:-))))))
இங்கே இருக்கும் 2$ கடையில் போய்,
'இது என்ன விலை?'ன்னு கேட்டது நினைவுக்கு வருது.
வலை உலகுக்கு நல்வரவு.
நன்றி துளசி கோபால்.. :)
கல்லூரியில் படிக்கும்போது என் அண்ணன் அண்ணிக்குக் குழந்தை பிறந்ததை நண்பிகளிடம் தெரிவிக்கையில் ரொம்ப excited-ஆ இருந்தேன். "ஹேய் எங்க அண்ணிக்குப் பையன் பிறந்திருக்கான்" என்று நான் சொல்ல, அதேபோல் over excitement-உடன் கேட்டுக்கொண்டிருந்த தோழி ஒருத்தி, "என்ன பையன்?" என்றாள் :-) அந்த நினைவு வந்தது!
//உங்ககிட்ட வார்த்தைய கரெக்ட்டா போட்டு பேசனும் போல இருக்கே//
:-)))
இதுவும் நல்லா இருக்கு... :)
- சேது
நல்லா சிரிக்க வைத்தற்கு மிக்க நன்றி…
தினேஷ்
படித்து சிரித்ததற்கு நன்றி ... :)
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home